சட்டப்படியான அறிவிப்பு

 

பயன்பாட்டுக்கான விதிமுறைகள்

 

இந்த வலைத்தளத்தையும் அதன் பொருளடக்கங்களையும் பொதுவான தகவல் அளிக்கும் நோக்கங்களுக்காக உங்களுக்கு வழங்குவதில் Takeda பெருமை கொள்கிறது எங்கள் வலைத்தளத்தை உபயோகிப்பது தொடர்பான இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாகப் படிக்கவும். வலைத்தளத்தில் தகவல்கள் சேர்க்கப்படும் சமயத்தில் அவை துல்லியமாக இருப்பதை உறுதி செய்வதற்கான மிகச்சிறந்த முயற்சிகளை Takeda எடுக்கும். எனினும், தகவல்கள் துல்லியமானவை என்பதற்கான உத்தரவாதத்தை Takeda தர முடியாது மற்றும் இந்தத் தகவல்களை சார்ந்திருப்பதிலிருந்து எழும் எந்த நஷ்டங்கள் அல்லது சேதங்களுக்கு எந்த கொடுக்கல் பொறுப்பையும் ஏற்பதில்லை. உங்களுக்கு அறிவிப்பு கொடுக்காமலேயே, தகவல்கள் எந்த நேரத்திலும் Takeda வினால் மாற்றப்படலாம். இந்த வலைத்தளத்தை உபயோகிப்பதன் மூலம், எந்த ஒரு வரம்போ அல்லது தகுதியோ இல்லாமல் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் சம்மதிக்கிறீர்கள்.

 

பொருட்கள் மற்றும் அறிவுசார் சொத்து உரிமைகளை பயன்படுத்தல்

 

இந்த வலைத்தளத்தின் காப்புரிமை Takeda-விற்க்கு சொந்தமானது. மற்ற அனைத்து அறிவுசார் சொத்துரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. நீங்கள் நகலெடுக்கும் இந்த பொருட்களின் அனைத்து பதிப்புரிமை மற்றும் பிற தனியுரிம அறிவிப்புகளையும் அந்த நகல்கள் கொண்டிருக்கும் பட்சத்தில், இந்த இணையதளத்தில் வணிகரீதியான பயன்பாட்டிற்காக மட்டுமே நகலெடுக்க Takeda உங்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது.

 

மூன்றாம் தரப்பு வலைத்தளங்களுக்கான லின்க் கள்

 

இந்த வலைத்தளமானது அவ்வப்போது மூன்றாம் தரப்பு’ வலைத்தளங்களின் ஹைப்பர்டெக்ஸ்ட் லின்க் களைக் கொண்டிருக்கும். இதுபோன்ற வேறு எந்த வலைத்தளத்திலும் உள்ள எந்தவொரு தகவல் அல்லது கருத்திற்கும் Takeda பொறுப்பல்ல, ஸஅற்றும் அவை சம்பந்தமான எந்தவொரு கொடுக்கல் பொறுப்பையும் ஏற்பதில்லை. அத்தகைய வலைத்தளங்களின் மீது Takeda எந்த கட்டுப்பாடும் செலுத்தமுடியாது என்பதாலும், அவற்றின் உள்ளடக்கம் Takeda வுக்கு முன்னறிவிப்பின்றி மாற்றப்படுவதாலும், அணுகப்பட்ட எந்த தகவலும் துல்லியமானது என்பதையும், அந்த வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருளானது வைரஸ்கள் அல்லது அழிக்கும் தன்மை கொண்ட வேறு ஏதேனும் பொருட்கள் கொண்டிருக்கவில்லை என்பதையும் உறுதிசெய்வது வலைத்தளத்தினை உபயோகிக்கும் பயனரின் பொறுப்பாகும். பதிவிறக்கம் செய்யப்பட்ட எந்தவொரு பொருளினாலும் ஏற்படும் இழப்பு, சேதம், செலவுகள் அல்லது கொடுக்கல் பொறுப்பு ஆகியவற்றுக்காக எந்தவொரு கொடுக்கல் பொறுப்பையும் Takeda ஏற்பதில்லை.

 

தகவல்கள் என்பவை, ஆரோக்கியத்தின் பராமரிப்புக்கான தொழில்முறை ஆலோசனைகளுக்கு மாற்றாக இருக்க மாட்டா.

 

வலைத்தளத்தின் தகவல்கள் சுகாதாரம் பற்றிய அறிவை வழங்குவதற்காக மட்டுமே என்ற உத்தேசம் கொண்டவையாகும். இந்த தகவல் முழுமையானதாக கருதப்படக்கூடாது, மேலும் ஒரு மருத்துவர் அல்லது பிற சுகாதார நிபுணர்களிடம் செல்லும்போது, கலந்தாலோசனையின்போது அல்லது ஒரு மருத்துவரின் அல்லது சுகாதாரப் பராமரிப்பு தொழில்தகமையாளரின் ஆலோசனையின் போது பயன்படுத்தலாகாது. சுகாதார பிரச்சினைகளை சுயமாகவே சமாளித்துக்கொள்வதை Takeda பரிந்துரைப்பதில்லை. சுகாதாரப் பராமரிப்பு சம்பந்தமான கேள்விகள், ஒரு மருத்துவர் அல்லது சுகாதாரப் பராமரிப்பு தொழில்தகைமையாளருடன் முறையாக கலந்தாலோசிக்கப்படுதல் அவசியமாகும். இந்த வலைத்தளத்தின் தகவல்கள் மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இருக்காது, அல்லது அத்தகைய ஆலோசனையைப் பெறுவதில் தாமதத்திற்கு வழிவகுக்கவும் செய்யாது.

 

தகவல் என்பது துல்லியமானது, முழுமையானது அல்லது தற்போதையது என இருக்க அவசியமில்லை.

 

இணையதளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் முற்றிலும் முழுமையானவை அல்ல. Takeda சாத்தியமான இடங்களில் துல்லியமான மற்றும் தற்போதைய தகவல்களைச் சேர்க்க நியாயமான முயற்சிகளை எடுக்கிறது, ஆனால் அதன் துல்லியம் அல்லது முழுமை குறித்து எந்த உத்தரவாதமோ பிரதிநிதித்துவமோ தருவது இல்லை. இந்தத் தகவல், வெளிப்படையான அல்லது மறைமுகமாக எந்தவொரு உத்தரவாதமும் இல்லாமல் “உள்ளது உள்ளபடி” வழங்கப்படுகிறது, இதில் குறிப்பிட்ட நோக்கத்திற்காக உள்ளார்ந்த பொருந்து தன்மைக்கான உத்தரவாதமோ அது மட்டுமே அல்லாத பிற வெளிப்படையான உத்தரவாதமோ கிடையாது. வலைத்தளத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கணினி சேதங்களுக்கு Takeda பொறுப்பல்ல. வலைத்தளத்திற்கான அணுகல் சரியான நேரத்தில் கிடைக்கும், தடையின்றி இருக்கும், அல்லது பிழை இல்லாததாக இருக்கும் என்று Takeda எந்த பிரதிநிதித்துவத்தையும் உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. இந்த வலைப் பக்கங்கள் அல்லது அவற்றைக் கிடைக்கச் செய்யும் சேவையகம் ஆகியவை வைரஸ்கள் அல்லது பிற தீங்கு விளைவிக்கும் கூறுகள் இல்லாதவை என்று Takeda உத்தரவாதம் அளிப்பதில்லை. எந்தவொரு நிகழ்விலும் Takeda நிறுவனமோ, அதன் கூட்டமைப்புக்கள், துணை நிறுவனங்கள் மற்றும் அந்தந்த அதிகாரிகள், இயக்குநர்கள், பணியாளர்கள், முகவர்கள், பிரதிநிதிகள், தகவல் வழங்குநர்கள் மற்றும் உரிமதாரர்கள் மற்றும் அந்தந்த வாரிசுகள் மற்றும் நியமனம் பெற்றவர்கள் ஆகியோர் எந்தவொரு நேரடி, மறைமுக, தற்செயலான, விளைவு காரணமான, முன்மாதிரியான, சிறப்பு மற்றும் தண்டனை ரீதியான, பிற சேதங்கள் மற்றும் அத்தகைய சேதங்களின் சாத்தியம் குறித்து தெரிவிக்கப்பட்டாலும் கூட எந்த கொடுக்கல் பொறுப்பையும் ஏற்பதில்லை. மேற்கூறிய விலக்கானது, மறைமுகமான உத்தரவாதங்களை விலக்க அனுமதிக்காத ஆளுமை எல்லைகளுக்குள் பொருந்தாது.

 

தகவல்கள்

 

இந்த வலைத்தளத்திற்கான மின்னணு தகவல்தொடர்புகளில் இருக்கின்ற தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்தவொரு தகவலும் Takeda’வின் தனியுரிமை அறிவிப்பால் நிர்வகிக்கப்படுகிறது.