நோய்கண்டறிதல் பற்றி தெரிந்துகொள்வது ஒரு மருத்துவரிடம் பேசுவதில் துவங்குகிறது. வம்சாவளி ஆஞ்சியோ எடிமா (HAE) அரிதானது என்பதால், ஜஅல மருத்துவர்கள் உள்பட வெகு சில பேர்களே அது பற்றி கேள்விப்பட்டுள்ளனர். உண்மையில், பல மருத்துவர்கள் HAE யுடனான ஒரு நோயாளியை பார்த்திருக்கவே மாட்டார்கள். அதனால்தான், துல்லியமாக நோய் கண்டறிதல் என்பது சவாலான விஷயம்
உங்கள் மருத்துவரி’டம் என்ன எதிர்பார்க்கலாம்? முன் பதிந்த சந்திப்பு
உங்கள் மருத்துவரி’டம் என்ன எதிர்பார்க்கலாம்? முன் பதிந்த சந்திப்பு
உங்களுக்கு HAE இருக்கக் கூடும் என உங்கள் மருத்துவர் நினைத்தால், உங்களுக்கு இருந்த அடையாளங்கள் யாவை, எப்போது அவற்றை நீங்கள் கவனித்தீர்கள் என அவர் கேட்க வாய்ப்புண்டு. HAE பொதுவாக உறவினர்கள் வழியாக கடத்தப்படுவதால், உங்கள் குடும்பத்தில் யாராவது வீக்கம் கொண்டிருந்த சமயங்கள் உள்ளதா அல்லது HAE நோய் கண்டறியப்பட்டதா என்று உங்கள் மருத்துவர் கேட்க வாய்ப்புண்டு.
உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கும் HAE இல்லையென்றாலும் கூட உங்களுக்கு இருக்கக்கூடும். HAE நிகழ்வுகளில் நான்கில் ஒன்று திடீரென்ற மரபணு பிறழ்வு காரணமாக விளைகிறது.
உங்களுக்கு HAE இருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால், இந்த விவாத வழிகாட்டியைப் பதிவிறக்கி உங்கள் அறிகுறிகளைப் பதிவுசெய்து உங்கள் மருத்துவருடன் உரையாடலைத் தொடங்கவும்.
HAE நோயிருப்பதை உறுதி செய்வதற்கான சோதனைகள்
உங்களுக்கு HAE இருக்கலாம் என்று உங்கள் மருத்துவர் நினைத்தால், நோயறிதலை உறுதிப்படுத்த பெரும்பாலும் இரத்த பரிசோதனையே பயன்படுத்தப்படுகிறது. இந்து உங்களிடம் C1-INH புரதம் எவ்வளவு இருக்கும் என அளவெடுக்கிறது. உங்கள் அடையாளங்கள், சில மருந்துகளுக்கு அவை எவ்வாறு பதிலளிக்கின்றன, உங்கள் குடும்ப வரலாறு போன்ற பிற தகவல்களையும் அவர்கள் பார்ப்பார்கள்.